பஞ்சதீபாக்னி சூரணம்

Anuradha Viswesan facebookல் எழுதியது:

ஆரோக்யம் நம் கையில் :

நம் ஆரோக்யம் நம் கையில்தான் உள்ளது. அதாவது ஆதிவ்யாதி என சொல்லப்படும் மிகப் பெரிய எதிர்பாராத வியாதிகள் நாம் பிறக்கும் முன்னரே தீர்மானம் செய்யப்பட்டு நம் தலையெழுத்துடனே வருவது அதை எதனாலும் மாற்ற முடியாது. இறைவனை பிரார்த்திக்கும் போது அதைத் தாங்கக் கூடிய வலிமை அவர் தருவார் அவ்வளவுதான்.

ஆனால் சிறிய சிறிய அஜீரணக்கோளாறு ஜலதோஷம் தலைவலி கை கால் வலிகள் காது குடைச்சல் கண் எரிச்சல் உஷ்ணம் குளுமை வாயு தொல்லை போன்றவைகளால் ஏற்படும் பல துன்பங்களை நாம் மிக சுலபமாக தவிர்க்க முடியும்

என்னதான் நாம் மிக ஜாக்கிரதையாக நம் கையாலேயே தயாரித்து வெளியில் சாப்பிடாமல் இருந்தாலும் உறவினர் விசேஷங்கள் திருமணங்கள் மற்ற பிரயாணங்கள் என செல்லும் பொழுது சில சமயம் தவிர்க்க முடியாமல் போகும்

நான் வெளிநாடு சென்றாலும் வேறு எங்கு சென்றாலும் வெளியில் சாப்பிட அஞ்சுவதில்லை
காரணம் இடம் சுற்றும் ஆசை பலரையும் சந்திக்கும் ஆசையுடன் நம்மை உபசரிக்கும் போது சாப்பிட வேண்டிய நிர்பந்தம்
நானும் ரசித்து உண்பேன் என்பது வேறு விஷயம்

கல்லும் முள்ளும் இருக்கும் காட்டில் செல்லவேண்டுமானால் அனைத்தையும் சரி செய்ய நம்மால் முடியாது அதனால் நாம் காலில் ஒரு ஷூ போட்டுக் கொண்டால் நிம்மதியாக நடப்போம் அது போல நானும் ஒரு பொடி வைத்து இருக்கின்றேன்
(கடைசியில் விபரம் )

அத்துடன் தினமுமே இன்று புதிதாய் பிறந்தோம் என நினைத்து விடிகாலை ஒரு பாட்டில் 4 டம்ளர் போல நல்ல ஜலம் குடித்து விடுவேன்
நம் இரைப்பையில் அவை நிரம்பி அதிலிருந்து ஒரு கேஸ் கிளம்பி உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை நம் ரத்தத்தை சுத்தம் செய்கின்றது
நம் எதிர்ப்பு சக்தியை அன்றன்று வளர்க்கின்றது
தண்ணீர் குடித்த பிறகு ஒன்றரை மணி நேரத்திற்கு எதுவும் சாப்பிடக்கூடாது
படுக்கையிலிருந்து எழுந்ததும் அருந்தி விடுவேன்
25 வருடங்களாக பழக்கம்
இன்றுவரை என் உடல் வெயிட் அதே நிலையில்தான்
அத்துடன் நான் முன்பு எழுதிய சின்ன சில உபாதைகள் எதுவும் வருவதில்லை என்பது உண்மை
முக்கியமாக மலச்சிக்கல் ஏற்படுவதில்லை. அதுதான் அனைத்து வ்யாதிகளுக்கும் மூல கரணம்.
அப்படியே ஏதேனும் ஜுரம் வருவது போல இருந்தாலும் இஞ்சி ஜூஸ் மூன்று வேளை குடித்து விடுவேன் உடனே ஜுரம் காணாமல் போய்விடும்.

முக்கியமான ஒன்று எந்த நோய் பற்றியும் நான் படிப்பதில்லை.
அதை சாப்பிடாதே இதைச் சாப்பிடாதே என எழுதுவதையும் நான் நம்புவதில்லை
ஒரு காலத்தில் தேங்காய் எண்ணையை பழித்து பலரும் நம்மை முட்டாள் ஆக்கினார்கள்

ஆங்கிலேயர்கள் நம் நாட்டை எப்பொழுது ஆக்ரமித்தார்களோ அன்றிலிருந்து நம் நல்ல கலாச்சாரம் படிப்பு மருத்துவம் அனைத்தும் போயிற்று
மிளகின் நல்ல குணத்தை அறிந்து மிளகாயை நமக்கு அறிமுகப்படுத்தி மிளகு மூட்டைகளாக கொண்டு சென்றார்கள்
நம் நார்த்தங்காயின் மகிமை புரிந்து சைனாக்காரன் வாழ்கின்றான்
அமெரிக்காவில் காஸ்கோ போன்ற டிபார்ட்மென்ட் ஸ்டோரி ல் தேங்காய் எண்ணெய் பாட்டில்களும் மஞ்சள்பொடி டப்பாக்களும் வரிசையாக அடுக்கி இருப்பதைப் பார்த்து வியந்து போனேன்.
சைனா காரர்கள் IT யில் வேலை செய்பவர்கள் மஞ்சள்பொடி டப்பாவை கையிலேயே வைத்திருக்கின்றனர்
மஞ்சள் பொடி மிகப்பெரிய ஆன்ட்டிபயாட்டிக்.

குதிரை பந்தயத்தை நமக்கு அறிமுகப்படுத்திவிட்டு நம் யோகா கலை முறையை வெளிநாட்டினர் கொண்டு சென்றனர்.
ஆங்கிலக் கல்வியை நமக்கு அறிமுகப்படுத்தி விட்டு நம் வேதத்தை அவர்கள் கவர்ந்து சென்றனர்.
கொக்கக் கோலா பானங்களை அறிமுகப்படுத்தி மூலிகை விஷயங்களை அவர்கள் கொண்டு சென்றனர்
ஆங்கில மருத்துவத்தை அறிமுகப்படுத்தி நம் புராதன மருத்துவத்தை அவர்கள் கொண்டு சென்றனர்

நாம் உடம்பு சரியில்லை என்றால் மாத்திரைகளை சாப்பிட்டு பக்கவிளைவுகளில் அவஸ்தைப்படுகிறோம் . ஆனால் அவர்களோ நம் மஞ்சளின் மகிமையை அறிந்து அதை பயன்படுத்துகின்றனர்

நமக்கு எதிலும் பயம் இருக்கக்கூடாது சாஸ்திரங்களிலும் தர்மங்களிலும் நம்பிக்கை வேண்டும் .
நடப்பது நடந்தே தீரும் அவனன்றி எதுவும் அசைவதில்லை என நம்பிக்கை வேண்டும்
இப்போதெல்லாம் இளைய சமுதாயம் நாம் அன்புடன் சொல்கிறபடி சொன்னால் புரிந்து கொள்கிறார்கள்
சின்ன குழந்தையில் இருந்தே மூலிகை பொடிகள் மற்றும் கறிகாய் பழங்கள் இவற்றில் ருசிஏற்படுத்த வேண்டும்.
என் பேத்திக்கு அப்படி தந்து பழக்கப்படுத்தியதை பாருங்கள்.

சுகர், கான்சர், ஹார்ட் அட்டாக் போன்றவை கூட பாதி பயத்தினால் தான் வருகி றது.
தைரியமாக இருங்கள் நம்மை மீறி என்ன நடந்தால் தான் என்ன எதற்கும் கவலை வேண்டாம்
பிடித்ததை அளவுடன் சந்தோஷமாக சாப்பிடுங்கள்

நான் எழுதும் இந்த பொடியை மதியம் சாப்பிட்டதும் ஒரு துளி போட்டுக்கொண்டால் போதும் எந்த கவலையும் வேண்டாம்
ஒரு குட்டி டப்பாவில் போட்டு கைப்பையில் வைத்துக் கொண்டு நம் கைப்பையில் வைத்துக் கொண்டு விட்டால் ஹோட்டல் திருமணம் எங்கு சென்றாலும் இதனால் எந்த புட் பாய்சன் உம் (Food poison) நம்மை பாதிக்காது.
வடை பாயசத்துடன் சாப்பிட்டாலும் நிறைய ஆயில் Fat என ஒரு வெட்டு வெட்டினாலும் ரசித்து ருசித்து சாப்பிட்டு விட்டு பிறகு இந்த பொடியை போட்டு கொண்டு விடுவேன்.

பஞ்சதீபாக்னி சூர்ணம் .

சுக்கு 5 gm , மிளகு 5 gm ,
அரிசி திப்பிலி 5 gm , ஜீரகம் 5 gm ,
ஏலக்காய் 5 gm,
இவற்றை வாங்கி (Freezer இல் வைத்தால் நன்கு பொடியாகும்)
முதலில் மிக்சியில் பொடி செய்து அத்துடன் சிறுகச் சிறுக 250 gm சீனாகல் கண்டை அல்லது டைமண்ட் கல்கண்ட போட்டு நன்றாக பொடியாைனதும் நல்ல டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்துவிட்டு அவ்வப்பொழுது சின்ன டப்பாவில் வெளியில் வைத்து யூஸ் பண்ணலாம்.
ரொம்ப காரமா தோணினா மேலும் கொஞ்சம் கல்கண்டு கூட சேர்த்துக் கொள்ளலாம்
பெரிய Bar கல்கண்டு வேண்டாம்
சுகர் இருப்பவர்கள் சுகர் ஃபிரீ பவுடர் வாங்கி கலந்து உபயோகிக்கலாம்.
சர்வ ரோக நிவாரணி..

பலருக்கும் நான் இதை சொல்லி எழுதிவைத்துக்கொண்டு உபயோகிக்கின்றனர் ரயில் பயணங்களில் கூட பலரும் இதை டேஸ்ட் பார்த்து எழுதிக் கொண்டனர்.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s